சென்னை ஓட்டேரி பகுதியில் பர்கர் கடை மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முக்கிய கஞ்சா வியாபாரி உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கஞ்சா விற்பனை தொடர்பாக, ஓட்டேரியில் ஐசக் ஜெபக்குமார் என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது நண்பர்கள் அஜித்குமார், டேவிட் பிரின்ஸ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், டேவிட் பிரின்ஸ் வேலை பார்த்த பர்கர் கடையில், முதலாளிக்கு தெரியாமல் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த முக்கிய நபராக கருதப்படும் வசந்த சுமன் என்பவரை அரக்கோணம் பகுதியில் வைத்து போலீசார் மடக்கி பிடித்தனர்.நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.