தமிழ்நாடு

சென்னையில் கஞ்சா போதையில் குழந்தை கடத்தலா? - அலறிய சிறுவர்கள்... ரத்தம் சொட்ட தர்ம‌ அடி

தந்தி டிவி

சென்னை புளியந்தோப்பில், குழந்தையை கடத்த முயன்றதாக கஞ்சா போதை ஆசாமியை, பொது மக்கள் அடித்து துவைத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கடுகளூர் கிராமத்தைச் சேர்ந்த அஜித் என்பவர், கஞ்சா போதைக்கு அடிமையாகி, சென்னை புளியந்தோப்பு பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் அப்பகுதியில் உள்ள குழந்தைகளை தூக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, சிறுவர்கள் கூச்சலிட்ட‌தும், அப்பகுதி மக்கள், குழந்தையைக் கடத்த முயன்றதாக கூறி, அடித்து துவைத்துள்ளனர். உடல் முழுவதும் ரத்தக் காயம் ஏற்பட்ட நிலையில், அருகில் உள்ள காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். இது தொடர்பாக புகார் பெற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்