தமிழ்நாடு

மாமியார் பெயரில் மருமகன் செய்த நூதன மோசடி - பதறிய நகை கடை ஓனர்

தந்தி டிவி

சென்னை, பெரம்பூர் ஹைதர் கார்டன் பகுதியை சேர்ந்த ராம்பால் சோனி என்பவர், அதே பகுதியில் 40 வருடமாக நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரிடம் சென்னை, எழும்பூரை சேர்ந்த ஜாபர் அலி என்பவர்... தன்னுடைய மாமியாருக்கு புற்றுநோய் இருப்பதாகவும், அதனால் மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாக கூறி 400கிராம் தங்க நகைகளை அடமானம் வைத்து லட்சக் கணக்கில் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இதில், ஜாபர் அலி அடமானம் வைத்த நகைகள் அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என கூறப்படுகிறது. இது குறித்து ராம்பால் சோனி ஓட்டேரி காவல்நிலையத்தில் புகாரளித்ததாகவும், விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜாபர் அலி பணத்தை திருப்பி கொடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அவர் மீது போலீசார் வழக்குபதிவு ஏதும் செய்யாமல் விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது வரை தனக்கு பணமும் கிடைக்கவில்லை எனவும், போலீசாரிடம் முறையிட்டால் அவர்கள் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் கூறி குற்றம்சுமத்திய ராம்பால் சோனி, இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு