தமிழ்நாடு

மருத்துவமனையில் ஆபாச படம் பார்த்த ஊழியர் : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியர் ஒருவர் உடைமாற்றும் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த‌து அம்பலமாகியுள்ளது.

தந்தி டிவி

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பராமரிப்பு பணி செய்துவரும் ஊழியர், சிவப்பிரகாஷ். நேற்று முன்தினம் பணி நேரத்தில் தனது செல்போனில் ஆபாச படங்களை சிவ பிரகாஷ் பார்த்து கொண்டிருந்த‌தாக கூறப்படுகிறது. இதனை கண்ட மருத்துவமனை மேலாளர் சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிவப்பிரகாஸின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அதில் சில பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து சிவபிரசாஷிடம் கிடுப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, மருத்துவமனையில் பெண்கள் உடைமாற்றும் அறையில் செல்போனை மறைத்து வைத்து சிவபிரகாஷ் வீடியோ எடுத்தது தெரிய வந்தது. பராமரிப்பு பணி என்ற பெயரில் பெண்கள் உடை மாற்றும் அறைக்குள் நுழையும் சிவப்பிரகாஷ், யாரும் இல்லாத நேரத்தில் செல்போனை மறைத்து வைத்து, பல பெண்களை இவ்வாறு வீடியோ எடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது. வீடியோக்களை வேறு யாருக்காவது அனுப்பி இருக்கிறாரா என்ற கோணத்தில் சிவபிரகாஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்