தமிழ்நாடு

பேரவையில் துரைமுருகன் - விஜயபாஸ்கர் இடையே கருத்து மோதல்

துணை முதல்வர் ஓ.பி.எஸை ஜல்லிக்கட்டு நாயகன் என சொல்வது ஏன்? என பேரவையில் துரைமுருகன் - விஜயபாஸ்கர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

தந்தி டிவி
சட்டபேரவை விவாதத்தின் போது விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் பெயரை குறிப்பிட்டு ஜல்லிக்கட்டு நாயகர் என்றார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும் போது ஒவ்வொரு முறையும் துணை முதல்வரை ஜல்லிக்கட்டு நாயகர் என்று குறிப்பிடுகிறார்கள். அவர் என்ன மாடு பிடி வீரரா? எப்போதாவது காளைகள் அடக்கி உள்ளாரா என கேள்வி எழுப்பினார். பின்னர் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டுக்காக நாடே போராட்டம் நடத்திய போது சிறப்பு அனுமதியை பெற்று தந்ததால், ஜல்லிக்கட்டு நாயகன் என்று பெயர் வந்தது என விளக்கம் அளித்தார். மேலும், விராலிமலை பகுதியில் பிரம்மாண்டமாக நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில், சிறப்பு அழைப்பாளராகவோ, மாடு பிடி வீரராகவோ துரைமுருகன் பங்கேற்கலாம் என்று கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்