தமிழ்நாடு

போலீசை கண்டித்து 5ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் - வாடகை கார் ஓட்டுனர் சங்கம் அறிவிப்பு

போலீஸை கண்டித்து வரும் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கால் டாக்சி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

தந்தி டிவி
காஞ்சிபுரத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற கால் டாக்ஸி ஓட்டுனர், போக்குவரத்து காவலர்கள் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல் ஆணையர் அலுவலகத்தில் வாடகை வாகன ஒட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூஸ் உள்ளிட்டோர் புகார் அளித்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், போலீசாரால் கார் ஓட்டுனர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருவதாக குறிப்பிட்டார். கடந்த ஓராண்டுக்குள் 3 கார் ஓட்டுனர்கள் தற்கொலை செய்துள்ளதாகவும் கூறினார். இதனால், வரும் 5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கார் ஒட்டுனர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்