தமிழ்நாடு

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டம்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

கோவை, பொள்ளாச்சியிலும் இஸ்லாமியர்கள் மறியல்

கோவை ஆத்துப்பாலம் பகுதியில் கூடிய இஸ்லாமிய அமைப்பினர், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். செல்போன் டார்ச் அடித்தும் போலீசாரின் தடியடிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் பொள்ளாச்சியிலும் இஸ்லாமியர்கள் மறியலில் ஈடுபட்டனர். காந்திசிலை முன்பு கூடிய 500-க்கும்மேற்பட்டோர், போலீசாருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

திருப்பூரில் போலீசாரின் தடியடியை கண்டித்து சாலை மறியல்

போலீசாரின் தடியடியை கண்டித்து, திருப்பூரில் 500-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிடிசி கார்னரில் கூடிய அவர்கள், போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

இஸ்லாமிய அமைப்புகள் சாலை மறியல்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரிலும் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தென்காசி - ராஜபாளையம் சாலையில் அமர்ந்து அவர்கள் காவல்துறைக்கு எதிராக முழக்கமிட்டனர்.பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்

போலீசாரின் தடியடியை கண்டித்து சாலை மறியல்

மதுரையில் வில்லாபுரம் பகுதியில் விமானம் நிலையத்திற்கு செல்லும் சாலையில், 300க்கும் மேற்பட்டோர் இரவில், சாலைமறியலில் ஈடுபட்டனர். பெண்கள் கை குழந்தைகளோடு மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, கலைந்து சென்றனர்.

திருச்சியில் இரண்டு இடங்களில் சாலை மறியல்

காவல் துறையினர் தடியடியை கண்டித்து திருச்சியில் வெவ்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கண்டோன்மெண்ட் எம்.ஜி.ஆர் சிலை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து, அங்கிருந்து கலைந்து சென்ற அவர்கள், தலைமை தபால் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு சென்ற காவல்துறை அவர்களை சமாதானம் செய்ததை தொடர்ந்து, கலைந்து சென்றனர்.

கடலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் நடைபெற்ற போலீஸ் தடியடியை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் இஸ்லாமியர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பண்ருட்டி, சிதம்பரம், லால்பேட்டை மற்றும் மங்கலம்பேட்டை பகுதிகளில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் மறியல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அழகியமண்டபம் பகுதியில் சாலையோரம் ஆர்ப்பாட்டம் நடத்திய இஸ்லாமியர்கள், குளச்சல், நாகர்கோவில் இடலாக்குடி பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி