தமிழ்நாடு

தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி

புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, இந்தியா முழுவதும் 64 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை அறிவித்தார். தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்.இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனு மீது அக்டோபர் 01 ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும் என்றும் வேட்பு மனுவை அக்டோபர் 03 ஆம் தேதி திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் அணையர் அறிவித்துள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு