Tourist Attack | வெண்ணை உருண்டை பாறையில் போட்டோ எடுக்க போட்டி | டூரிஸ்ட்களை தாக்கிய நேவி என்ஜினீயர் #mamallapuram #tourist #attack #crime #thanthitv சுற்றுலா பயணிகளை தாக்கிய கடற்படை பொறியாளர் கைது மாமல்லபுரம் வெண்ணை உருண்டை பாறை பகுதியில் புகைப்படம் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் தொல்லியல் துறை பாதுகாவலர் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர். டெல்லியை சேர்ந்த இந்திய கடற்படை பொறியாளர் ஆசிஷ் சவுத்ரி, தனது குடும்பத்தினருடன் வெண்ணை உருண்டை பாறை பகுதியில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தபோது, மற்ற சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க வழிவிடுமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆசிஷ் சவுத்ரி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தகராறை தடுக்க முயன்ற தொல்லியல் துறை பாதுகாவலர் நேத்தாஜி உட்பட 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய மாமல்லபுரம் போலீசார், தாக்குதலில் ஈடுபட்டதாக இந்திய கடற்படை பொறியாளர் ஆசிஷ் சவுத்ரியை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.