ஓடும்போதே நேர்ந்த பயங்கரம் - திடீரென மளமளவென தீ பிடித்து எரிந்த 23 பயணிகளுடன் சென்ற பஸ்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 23 பயணிகள் மற்றும் டிரைவர் 2 நபர் என ஏற்றுக் கொண்டு மதுரை வரை சென்ற கொண்டு இருந்தது. பேருந்து திருமாந்துறை டோல்கேட் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டீசல் கசிவின் காரணமாக மின்சார கேபிள் மீது பட்டதால் தீப்பிடிப்பு எரியத் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஓட்டுநர், பயணிகளை உடனடியாக இறக்கியதால் எந்தவித உயிர் சேதமும் இல்லாமல் பேருந்து முழுமையாக எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது. தகவல் அறிந்து வந்த ஹைவே போர்டல் போலீஸ் போக்குவரத்துகளை சீர் செய்தனர். தொடர்ந்து தகவல் அறிந்து அந்த தீயணைப்புத் துறையினர் தீவை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரமாக பரபரப்பு ஏற்பட்டது.