Thoothukudi | நேருக்கு நேர் மோதிய பேருந்து - ஆட்டோ.. உள்ளே சிக்கி துடித்த 4 உயிர்கள்
#Thoothukudi #accident #bus #auto #thanthitv
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் அந்தோணியார் கோவில் அருகே தனியார் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். அருப்புக்கோட்டையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி நோக்கி வந்த தனியார் பேருந்தும், காயல்பட்டினத்தில் இருந்து வைப்பாறு நோக்கிச் சென்ற ஆட்டோவும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் ஆட்டோ மற்றும் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. ஆட்டோவில் இருந்த மூன்று பேர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தருவைகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.