காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் 3 தனியார் தொழிற்சாலை பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
முன்னால் சென்ற லாரி மீது மோதாமல் இருக்க ஒட்டுநர் பேருந்தை நிறுத்திய போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தகவலறிந்து சென்ற போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள அவசர சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.