#Thanjavur #Funeral #ThanthiTV Thanjavur | தீப்பந்தம் வெளிச்சத்தில் உடல்களை அடக்கம் செய்யும் நிலை - 30 ஆண்டுகளாக நீடிக்கும் அவலம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உம்பளபாடி ஊராட்சி கருப்பூர் கீழத்தெருவில், கடந்த 30 ஆண்டுகளாக மயானச் சாலைக்கு மின்விளக்கு வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடலைத் தீப்பந்தம் மற்றும் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் கொண்டு சென்று அடக்கம் செய்யும் அவல நிலை நீடிக்கிறது. வயது முதிர்வால் உயிரிழந்த ராஜேந்திரன் என்பவரின் உடலையும் பொதுமக்கள் இருளில் தட்டுத்தடுமாறி எடுத்துச் சென்றனர். அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் குற்றம்சாட்டும் கிராம மக்கள், உடனடியாக மின்விளக்கு அமைக்காவிட்டால் சடலத்தை வைத்துப் போராட்டம் நடத்தப் போவதாகக் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.