தமிழ்நாடு

"எவனா இருந்தாலும் கட்டி வை"... கோபத்தின் உச்சிக்கே சென்ற அமைச்சர் - வைரலாகும் வீடியோ

தந்தி டிவி

பிராமணம்பட்டி நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் பெரியகருப்பன் திடீரென ஆய்வு செய்த நிலையில், அங்கு எழுத்து பிழையுடன் எழுதப்பட்டிருந்த திட்ட மதிப்பீடு பலகையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். "ஊரக வளர்ச்சி"க்கு பதில் "ஊராக வளர்ச்சி" என்றும்,

"உள்ளாட்சி துறை"க்கு பதில் "ஊள்ளச்சி துறை" என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது. இதை பார்த்த அமைச்சர் பெரியகருப்பன், இவ்வளவு எழுத்து பிழையோடு தமிழை கொலை செய்தது யார்? என ஆசிரியர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரை அழைத்து கேள்வி எழுப்பினார். அப்போது ஒப்பந்தக்காரர் தான் இந்த வேலையை செய்தது என்றதும் கோபமுற்ற அமைச்சர் அவரை பிடித்து கட்டி வையுங்கள் என ஆவேசமாக பேசினார். பின் உடனடியாக இதை மாற்றி எழுதி, தனக்கு போட்டோ எடுத்து அனுப்புங்கள் என கூறிச் சென்றார்.. இதனால் பள்ளி வளாகம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது

Pooja Hegde | JanaNayagan | CMVijay | CM விஜய்யின்.. ஜனநாயகனுக்கு `A' கொடுத்த சென்சார்

Breaking | Ali Khamenei | இதுவரை வெளியே வராத மகன் | காமேனியின் இறுதி சடங்கு உலகுக்கு சொல்லும் செய்தி

BREAKING || "வணக்கம் மெல்போர்ன்..." முதலில் தமிழில் ஆரம்பித்து இரண்டாவதாக ஹிந்தியில் பேசிய பிரதமர்

Breaking | CM Vijay | 4% இடஒதுக்கீடு | CM விஜய் அதிரடி உத்தரவு

Ali Khamenei | Iran | Trump | உலகமே உற்றுநோக்க தொடங்கியது காமேனியின் இறுதி சடங்கு