தமிழ்நாடு

"நிதி விவகாரங்களை ஆய்வு செய்ய சிறப்புக் குழு" - துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தகவல்

நிதி விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்ய, சிறப்புக்குழு அமைக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

பட்ஜெட் மீதான பொது விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அவர், நிதிநிலை அறிக்கையை, வேண்டும் என்றே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதாக கூறினார். மக்களிடம் இருந்து தங்களை பிரிக்கும் சூழ்ச்சிகளை எதிர்க்கட்சிகள் விட்டுவிட வேண்டும் என கூறிய துணை முதலமைச்சர், நிதிப் பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்துள்ளதாக கூறினார். நிதி விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைக்கப்படும் எனவும், இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தை தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்தது. இதையடுத்து, காலவரையின்றி பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்