தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- 26 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் | BSP Armstrong Case | ThanthiTV

தந்தி டிவி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் நகலை வழங்குவதற்காக எழும்பூர் நீதிமன்றத்தில் 26 பேரை போலீசார் ஆஜர்படுத்தினர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 28 பேரை போலீசார் கைது செய்த நிலையில், அதில், திருவேங்கடம் என்பவர் போலீசார் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக 30 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அதன் நகலை வழங்குவதற்காக சிறையில் இருந்து 26 பேரை பலத்த பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கில் முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ள நாகேந்திரன் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் அழைத்து வரப்படவில்லை. அப்போது குற்றப்பத்திரிக்கையின் நகலை பென்டிரைவ் மூலமாக கொடுத்தபோது, அவர்கள் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. சிறைக்குள் பென்டிரைவ் அனுமதியில்லை என்றும், குற்றப்பத்திரிகை நகலை காகித வடிவில் கொடுத்தால்தான் படிக்க ஏதுவாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அதற்கு பென்டிரைவ் மூலமாக குற்றப்பத்திரிகை நகல்களை வழங்குவதற்கு பிஎன்எஸ் சட்டத்தில் இடமுள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை வருகிற 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் அனைவரும் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்