அரிவாளை தூக்கி கொடூரமாக வெட்டி கொன்ற `காவலர்’ - தூத்துக்குடியில் படுபயங்கரம்.. திடுக் பின்னணி கதை
தூத்துக்குடி அருகே தனது அக்காவிடம் வாங்கிய நகைகளை திருப்பி தருமாறு கேட்ட தங்கையை காவலர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முடிவைதானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் தட்டார்மடம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னர் கள்ளக் காதலாக மாறியதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்புலட்சுமியிடமிருந்து காவலர் முத்துக்குமார் தங்க நகைகளை வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நகை விவகாரம் சுப்புலட்சுமியின் குடும்பத்திற்குத் தெரிய வந்ததையடுத்து, சுப்புலட்சுமியின் தங்கை பிரியா, காவலர் முத்துக்குமாரிடம் நகைகளைத் திருப்பித் தருமாறு கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த காவலர் முத்துக்குமார், மதுபோதையில் அரிவாளால் பிரியாவைக் கொடூரமாக வெட்டிவிட்டுச் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தப்பி ஓடிய காவலர் முத்துக்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
#thoothukudipoliceissue #police