தமிழ்நாடு

மணமேடையில் குத்தாட்டம் போட்ட மணமகள் - வீடியோ வைரல்

தந்தி டிவி

மணமேடையில் குத்தாட்டம் போட்ட மணமகள் - வீடியோ வைரல்

தொட்டதெல்லாம் தூள் பறக்குது மம்மட்டியான் பாடலுக்கு மணமகள் நடனமாடிய வீடியோக்களை கண்டு சலைத்துபோனவர்களெல்லாம், இந்த வீடியோவை கண்டு உற்சாகமடைகின்றனர்..

நடனமாடும் இந்த மூவரின் காம்பினேஷனை பார்த்து நீங்கள் யூகிக்கும் அனைத்தையும் தவிடுபொடியாக்கிறது இவர்களின் பின்னணி...

தந்தை தனது மகள்களுடன் நடனமாடும் வீடியோதான் இது...

மூத்த மகளின் திருமணத்தில் மகள்களுடனும் சேர்ந்து தந்தை நடனம்

மூத்த மகளின் திருமணத்தில் இளையமகளுடன் சேர்ந்து தந்தை குத்தாட்டம் போடும் இந்த சம்பவம் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது...

மகள்களுக்கு நடுவில் நடனமாடும் லாலு, ஒரு நடனக்கலைஞரும் கூட...

பெண்களின் நடுவில் ஆடுவது தந்தை என்பதையறிந்து வியந்த உறவினர்கள்

ஒருவர் மணமகள், மற்றொருவர் அவரின் சகோதரி சரி... நடுவில் ஆடும் அந்த இளைஞர் யார் என திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை வீட்டார் சிலர் கேட்க, அவர்தான் பெண்ணோட அப்பா என்பதை அறிந்து வாயடைத்து போயிருக்கின்றனர்..

இந்நிலையில், கூடிய உற்றாரும், உறவினரும்... தந்தை மகள்களின் இந்த அழகிய உறவையும், ஆரோக்கியத்தையும் கண்டு சிலாகித்து, இது நீடிக்க வாழ்த்து கூறி விடை பெற்றிருக்கின்றனர்...

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு