Dindigul | நாளை திருமணம்..மணமகனோடு பைக்கில் சென்ற மணப்பெண் உயிரிழப்பு திண்டுக்கல்லில், நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற மணப்பெண் கார் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரத்தைச் சேர்ந்த 26 வயது மரிய வெல்சியாவுக்கும், வெள்ளோட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெப பாஸ்டினுக்கும் நாளை திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், இன்று காலை மதுரையில் நடைபெறும் செவிலியர் தேர்வை எழுதுவதற்காக மணமகள் வெல்சியாவை, மணமகன் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி பிரிவில் சென்றபோது, கோயம்புத்தூரில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெல்சியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மணமகன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் விபத்தில் உயிரிழந்தது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#dindigul #accident #thanthitv