திருமணத்தின் போது மாப்பிள்ளை அழைப்பு, மணமகள் அழைப்பு போன்றவை ஆடம்பர கார்களிலேயே நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசத்தில் நடைபெற்ற திருமணத்தில், மாட்டு வண்டியில் மணமக்கள் அழைப்பு நடைபெற்றது. மணமக்கள் அருண் நேரு, கலைவாணி இருவரும் கம்ப்யூட்டர் பொறியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.. சென்டை மேளம் முழங்க நடந்த மணமக்கள் அழைப்பில், மாட்டு வண்டியில் பெண்ணை அமர வைத்து மாப்பிள்ளையே, மாட்டு வண்டியை ஓட்டி வந்தார். இதனை ஏராளமான மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கவும், கிடுகிடுவென விலை ஏறும் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்த அழைப்புக்கு ஏற்பாடு செய்ததாக மணமகன் அருண் நேரு தெரிவித்தார்.