திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா, சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ராவிடம், பெற்ற கடன் 65 லட்சம் ரூபாய்க்காக, அவர் அளித்த காசோலைகள் பணமின்றி திரும்பி வந்தன. இதையடுத்து போத்ரா, நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தாக்கல் செய்தார். இதில் நடிகர் ரஜினியை எதிர்மனுதாரராக சேர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் போத்ரா மற்றொரு வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பாக ரஜினி தாக்கல் செய்த பதில் மனுவில், பணம் பறிப்பதற்காக போத்ரா வழக்கு தொடர்ந்ததாகக் கூறியிருந்தார். இதையடுத்து, ரஜினிக்கு எதிராக போத்ரா, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஜினி, மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.