தமிழ்நாடு

வீட்டின் கதவை உடைத்து 131 சவரன் நகை கொள்ளை - அடையாளம் தெரியாத நபர்கள் துணிகரம்

வீட்டின் கதவை உடைத்து 131 சவரன் நகை கொள்ளை - அடையாளம் தெரியாத நபர்கள் துணிகரம்

தந்தி டிவி

வீட்டின் கதவை உடைத்து 131 சவரன் நகை கொள்ளை - அடையாளம் தெரியாத நபர்கள் துணிகரம்

கோவையில் இரும்பு வியாபாரியின் வீட்டின் கதவை உடைத்து 131 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.மணியகாரம்பாளையம் வேலவன் நகரைச் சேர்ந்த தினகரன் என்பவர், இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர், குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்று விட்டு, நேற்று இரவு வீடு திரும்பிய போது, கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 131 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். பின்னர், வழக்குப் பதிவு செய்த போலீசார், அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்