தமிழ்நாடு

கோவையில் காட்டு யானையை பிடிக்க தீவிர நடவடிக்கை

கோவையில் காட்டு யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

கோவை மாவட்டம் வரப்பாளையம், பெரிய தடாகம் பகுதிகளில் கடந்த 6 மாதமாக இரண்டு காட்டு யானைகள் சுற்றித் திரிந்தன. இவற்றுக்கு விநாயகன், சின்னத்தம்பி எனப் பெயரிடப்பட்டது. இந்த யானைகள், விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த நிலையில், 8 பேரை மிதித்துக் கொன்றதாக விவசாயிகள் அச்சத்துடன் தெரிவித்தனர். இந்நிலையில் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு, யானைகளை தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். இன்று அதிகாலை பெரிய தடாகம் அருகே விநாயகன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதை அடுத்து, மயக்கமடைந்தது. இதையடுத்து, யானையை கும்கிகள் உதவியுடன் வாகனத்தில் ஏற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு யானை சின்னதம்பியை பிடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு