தமிழ்நாடு

தடையை மீறி பட்டாசு வெடித்த சிறுவர்களை அழைத்து சென்ற போலீசார்

நெல்லையில் பட்டாசு வெடித்த 20 சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், அனுமதி இல்லாத நேரத்தில் பட்டாசு வெடித்தாக கூறி அங்குள்ள பகுதிகளை சார்ந்த 10 வயதுக்குட்பட்ட 20 சிறுவர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ஏராளமான மக்கள் காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர பிற நேரங்களில் பட்டாசு வெடிக்க மாட்டோம் என சிறுவர்கள் மற்றும் பெற்றோரிடமும் எழுதி வாங்கி கொண்டு சிறுவர்களை அவர்களின் பெற்றோர்களுடன் போலீசார் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்