தமிழ்நாடு

தவறான சிகிச்சையால் பெண் மூளைச்சாவு - மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

தவறான சிகிச்சையால், பெண் மூளைச்சாவு அடைந்த‌தாக கூறி, பெண்ணின் உறவினர்கள், தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.

தந்தி டிவி
தவறான சிகிச்சையால், பெண் மூளைச்சாவு அடைந்த‌தாக கூறி, பெண்ணின் உறவினர்கள், தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர். ஈரோடு மாவட்டம் பவானி தேவபுரத்தை சேர்ந்த ஞான சகுந்தலா என்பவருக்கு, தனியார் மருத்துவனையில் கர்ப்ப‌ப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அங்கு மருத்துவரின் அறிவுரைப்படி அவருக்கு இரண்டு ஊசிகள் போடப்பட்ட நிலையில், திடீரென வாயில் நுரை தள்ளியது. மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துமனைக்கு கொண்டு சென்ற போது, சகுந்தலா மூளைச்சாவு அடைந்துவிட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி மருத்துவமனையை பூட்டினர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை