தமிழ்நாடு

காதலனாக மாற நினைத்த பாய்பெஸ்டி... வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸால் வந்த வினை - காதலனுக்கு விழுந்த அடி

தந்தி டிவி

பர்கூர் அடுத்த மாட்டாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். பொறியியல் பட்டதாரியான இவர், கறிக்கடை நடத்தி வந்த நிலையில் 16 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, தர்மகவுண்டனூர் பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவரும், சிறுமியுடன் பழகி வந்த நிலையில், அவருடன் கைகள் கோர்த்தபடி காளிதாஸ் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார். இதை சிறுமியின் காதலனான சந்தோஷ்குமார் தட்டிக்கேட்டதால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த காளிதாஸ், தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு சந்தோஷ்குமாரின் கறிக்கடைக்கு சென்ற நிலையில், அவரை இரும்பு ராபாடல் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், காளிதாஸ் உட்பட நான்கு இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

BREAKING || "மத்திய அரசின் கல்வி நிதியை தமிழ்நாடு அரசு வாங்காமல் விடாது" - அமைச்சர் ராஜ்மோகன்

Breaking | TVK Vijay | "சாலை ஓரங்களில் பேனர்கள்.. கேட்டால்.." | தவெகவினருக்கு மீண்டும் பறந்த உத்தரவு

Breaking | Minister Viswanathan | ``தரம் தாழ்ந்த அரசியல்..'' | அமைச்சர் விஸ்வநாதன் வார்னிங்

BREAKING || பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வீடியோ வெளியிட்ட இளையராஜா

BREAKING || "மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை" - பெயர் சூட்டி ராணுவ வீரரின் தியாகத்தை கவுரவித்த CM விஜய்