தமிழ்நாடு

முட்புதருக்குள் வீசப்பட்ட குழந்தையை மீட்ட சிறுவனுக்கு பாராட்டு

தந்தி டிவி

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நாசரேத் பகுதியில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய சிறுவனை பாரட்டிய போலீசார், அவருக்கு பரிசு வழங்கி கௌரவித்தனர். நாசரேத் மில் ரோடு மணிநகர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் - ராஜேஸ்வரி தம்பதியின் மகன் 14 வயது சிவபாலு. இவர் பிறந்து சில மணி நேரமே ஆன, ஆண் குழந்தையை முட்புதருக்குள் கண்டு அதிர்ச்சிடைந்தார். பிறகு உடனே, குழந்தையை கையில் ஏந்தியவாறு ஊருக்குள் ஓடிச்சென்று பெரியவர்களிடம் ஒப்படைத்தார். துரிதமாக செயல்பட்டு முட்புதருக்குள் புகுந்து பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்றிய சிவபாலுவை பலரும் பாராட்டி வருகின்றனர். மீட்கப்பட்ட குழந்தையானது, குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அது யாருடைய குழந்தை? என்பன குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்