தமிழ்நாடு

வியாசர்பாடி, சென்னை|பணம் திருடியதாகப் புகார் - 13வது மாடியில் இருந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு

பணம் திருடியதாகப் புகார் - 13வது மாடியில் இருந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு

thanthitv

சென்னை வியாசர்பாடியில், 13-வது மாடியில் இருந்து கீழே விழுந்து 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வியாசர்பாடியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்ற சிறுவன், கொடுங்கையூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 32 ஆயிரம் ரூபாய் திருடியதாகப் புகார் எழுந்தது.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சிறுவனின் பெற்றோரை அழைத்து பணத்தைத் திருப்பிக் கொடுக்க அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பணம் எங்கே இருக்கிறது எனப் பெற்றோர் கேட்டபோது, முல்லை நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 13-வது மாடிக்கு அவர்களைச் சிறுவன் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவனின் உயிரிழப்பு விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sriperumbudur Missing Girl | மாயமான 8 வயது சிறுமி - "வற்புறுத்திய தாய்.." - திடுக் தகவல்கள்

CM Vijay| மகிழ்ச்சியோடு CM விஜய் அறிவிப்பு

Crime | சென்னை பாரிஸில் பெரும் சம்பவம் - தோண்ட தோண்ட.. அதிர்ந்த போலீஸ்

BREAKING || தனிக்கட்சியா, அதிமுகவில் இணைவா? தனுஷின் பொலிடிகல் மூவ்? - கணிக்கும் சித்தார்த்

Danush Political Party? | அதிமுக ஆஃபரை நிராகரித்து தனிக்கட்சியாக என்ட்ரி கொடுக்கும் தனுஷ்?