தமிழ்நாடு

ஆசை காதலியோடு நெருக்கமாக இருந்த போட்டோவை பகிர்ந்த பாய் பெஸ்டி - தட்டி கேட்ட காதலன் மீது வெறிச்செயல்

தந்தி டிவி

பர்கூர் அருகே, காதலியின் கை கோர்த்தபடியான புகைப்படத்தை, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த நபரை தட்டிக் கேட்ட காதலன் மீது கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாட்டாரப்பள்ளி கிராமத்தில் கறிக்கடை நடத்தி வரும் சந்தோஷ்குமார் என்பவரும், தபால்மேடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீலதா என்பவரும் காதலித்து வருகின்றனர். இந்நிலையில், தர்மகவுண்டனூரை சேர்ந்த காளிதாஸ் என்பவர், ஸ்ரீலதாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்ததாக, தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சந்தோஷ்குமார், இது குறித்து காளிதாஸிடம் தொலைபேசியில் வாக்குவாதம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ், தனது நண்பர்களுடன் வந்து இரும்பு ராடால் சந்தோஷ்குமார் மீது கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சந்தோஷ் குமார், பர்கூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்