ஆவடி அருகே கோனாம்பேடு, நாராயணபுரம் கிராமங்களில் ஆழ்துளை கிணறுகளில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்தவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு கிருபாகரன், வேல் முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த ஐந்து ஆழ் துளை கிணறுகள் சீல் கைக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், ஜனவரி 22-ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.