ஆழ்துளை கிணறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, புதுச்சேரி இளைஞர்கள் மேற்கொண்ட இருசக்கர வாகன பயணம் நடுக்காட்டுப்பட்டியில் நிறைவடைந்தது.குழந்தை சுஜித் மரணத்தை தொடர்ந்து, புதுச்சேரியை சேர்ந்த ஆனந்தன் உள்ளிட்ட இரு இளைஞர்கள் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூட வலியுறுத்தி, நடுக்காட்டுபட்டி கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் பிரசார பயணம் மேற்கொண்டனர். மழையால் பயணம் தடை படாதவாறு, தங்களது வாகனத்தின் மேல்பகுதியில் குடிசை அமைத்து பயணத்தை தொடர்ந்த இருவரும் இன்று சுஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், சுஜித் கல்லரையில் அஞ்சலி செலுத்திவிட்டு தங்களது பயணத்தை நிறைவு செய்தனர்.