தமிழ்நாடு

விளையாட்டு மைதானம் பின்புறம் கிடைத்த எலும்புக் கூடுகள் - வெளிவந்த திடுக்கிடும் பின்னணி

தந்தி டிவி

#thanthitv #crime #skeleton

விளையாட்டு மைதானம் பின்புறம் கிடைத்த எலும்புக் கூடுகள் - வெளிவந்த திடுக்கிடும் பின்னணி

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் விளையாட்டு மைதானம் பின்புறம், எலும்புக் கூடுகள் கிடந்ததை அடுத்து, போலீசார் அதனை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், எலும்பு கூடுகள் கிடைந்த இடத்தில் இருந்த சட்டையை வைத்து இறந்து கிடந்தது, அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என தெரியவந்தது. இதனிடையே, பிரேத பரிசோதனை முடிவில், இறந்தவரின் பின் மண்டையில் கனமான ஆயுதத்தால் பலமாக தாக்கியதால், காயம் ஏற்பட்டு அதனால் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் எலும்பு கூடுகள் கிடந்த இடத்தில் இருந்த சட்டையை வைத்து, இறந்து கிடந்தது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையில், கார்த்திகேயன் என்பவர் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், கார்த்திக்கை சுத்தியால் தாக்கிக் கொலை செய்தது தெரியவந்தது. மேலும், அவரை கொலை செய்துவிட்டு அதை புகைப்படம் எடுத்து, தனது நண்பர்களுக்கு அனுப்பியதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில், கார்த்திகேயன், கொலை குற்றத்தை மறைத்ததற்காக, அவரது நண்பர்கள் கார்த்தி என்கிற மெஸ்ஸி, தினேஷ்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்

LPG Shortage | "சிலிண்டர் பெற.." - மத்திய அரசு முக்கிய தகவல்

TVK Vijay | Airport | விஜய் பையில் இருந்த பொருள்? - ஏர்போர்ட்டில் பரபரப்பு

Breaking | Iran War | Fuel | 85% உயர்ந்துள்ள எரிபொருளின் விலை.. ஆகாசா ஏர் விமான கட்டணங்கள் உயர்வு