தமிழ்நாடு

பொறியியல் மாணவர் மீது சுடுபாலை ஊற்றிய விவகாரம் : பா.ம.க. பிரமுகர் கைது

சுடுபாலை ஊற்றி பொறியியல் பட்டதாரியை கொல்ல முயன்ற வழக்கில், பாமக பிரமுகரை 20 நாட்களுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
சேலம் மாவட்டம், சிந்தாமணியூர் பகுதியை சேர்ந்த கார்த்திக், ஓமலூர் தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிந்தாமணியூர் டீ கடையில் ஒரு குறிப்பிட்ட தலைவரின் வீடியோவை பார்த்ததால் ஆத்திரமடைந்த, பா.ம.க. பிரமுகர் சபரீசன், டீ போட வைத்திருந்த சுடுபாலை எடுத்து கார்த்திக் மீது ஊற்றியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மேச்சேரி போலீசார் சபரீசனை 20 நாட்களுக்கு பிறகு கைது செய்துள்ளனர். மாணவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க, பணம் இல்லாமல் கார்த்திக்கின் பெற்றோர் தவித்து வந்த நிலையில் அனைத்து கவுண்டர்கள் சங்கம் சார்பில் இரண்டு லட்சம் ரூபாய் நிதி திரட்டி மருத்துவ சிகிச்சைக்காக அவரது பெற்றோரிடம் வழங்கப்பட்டுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி