தமிழ்நாடு

சென்னை ஏரியில் மிதந்து வந்த தலை, கை, கால்கள் இல்லாத சடலம் - வெளியான அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

தலை, கை, கால் இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர் பகுதி செம்பரம்பாக்கம் ஏரியில், தலை, 2 கைகள் மற்றும் கால்கள் இல்லாமல் கல்லை கட்டியபடி சடலம் ஒன்று ஏரியில் மிதந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், அதே பகுதியில் உடலின் பாகங்களை தேடினர். அப்போது ஒரு கால் மட்டும் கிடைத்த நிலையில், மீதமுள்ள பாகங்களை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்டவர் யார்? கொலை செய்தது யார்? என விசாரித்து வரும் போலீசார், காவல்நிலையங்களில், காணாமல் போனவர்கள் குறித்த புகார்களையும் சேகரித்து வருகின்றனர்.

LPG Cylinder Price Hike | Hotels | ``சிலிண்டர் விலை ரூ.5000’’ - மக்கள் தலையில் இடியாய் இறங்கும் பில்

Petrol Sales | ஒரே நாளில் இத்தனை கோடி லிட்டர் பெட்ரோல் விற்பனையா?

Breaking | Sasikala | New Party | புதிய கட்சியின் பெயரை அறிவிக்கும் ச‌சிகலா

DMK Election Propaganda திமுகவுக்காக அரசியல் சூறாவளியாக மாறி சுழலும் ஓபிஎஸ் - அரசியல் சரவெடி ஆரம்பம்

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு