#Mamallapuram #AyudhaPooja #Celebration #ThanthiTV
Mamallapuram Ayudha Pooja Celebration | கடவுளாய் உருமாறும் கருங்கற்கள் - வித்தியாசமான பூஜை செய்த மாமல்லபுரம் சிற்பிகள் விநாயகர், முருகர், விஷ்ணு உள்ளிட்ட தெய்வச் சிலைகளாக உருவெடுக்கும் கருங்கற்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாமல்லபுரத்தில் சிற்பிகள் வித்தியாசமான முறையில் ஆயுத பூஜை கொண்டாடினர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கற்சிற்பக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வடிவமைக்கப்படும் கற்சிலைகள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், ஐந்துரதம் பகுதியில் உள்ள சிற்பக்கூடத்தில் சுமார் 10 டன் எடையுள்ள ராட்சத கருங்கல்லுக்கு தலைமைச் சிற்பி யானை வரதன் ஸ்தபதி, பொறி, கடலை, பூ, பழம் வைத்து, மஞ்சள், குங்குமம் இட்டு, கற்பூர ஆராதனை செய்து வழிபட்டார். தொடர்ந்து, சிற்பிகள் உளி மற்றும் சுத்தியலைக் கொண்டு கருங்கல்லைத் தொட்டு வணங்கி பூஜை செய்தனர். இதையடுத்து, அங்கு வடிவமைக்கப்பட்டிருந்த விநாயகர், சிவன், விஷ்ணு, அர்த்தநாரீஸ்வரர், ஆஞ்சநேயர் மற்றும் யானை சிலைகளுக்கும் கற்பூர ஆராதனை செய்து வழிபட்டனர். நெல்லை மாவட்டத்திலுள்ள கல் குவாரியில் இருந்து பிரத்யேகமாகக் கொண்டு வரப்பட்ட இந்த 10 டன் கருங்கல்லில், விஷ்ணு சிலை வடிவமைக்க உள்ளதாக சிற்பி யானை வரதன் ஸ்தபதி தெரிவித்தார்.