தமிழ்நாடு

பெரிய தொட்டிப்பாளையம் பகுதியில் சுடுகாடு அமைத்து தர அரசு அதிகாரிகள் மறுப்பு - வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்

பெரிய தொட்டிப்பாளையம் பகுதியில் சுடுகாடு அமைக்க வலியுறுத்தி ஒரு பிரிவு மக்கள் சுதந்திர தின விழாவை புறக்கணித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் பெரிய தொட்டிப்பாளையம் பகுதியில் சுடுகாடு அமைக்க வலியுறுத்தி, ஒரு பிரிவு மக்கள் சுதந்திர தின விழாவை புறக்கணித்து, வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சுடுகாடு அமைத்து தரக்கோரி, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சமுதாய மக்கள் போராடி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அப்பகுதி மக்கள் சுதந்திர தின விழாவை புறக்கணித்து, வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், கிராமத்தின் மையப்பகுதியில் பாடை கட்டியும், கைகளில் கருப்புக்கொடி ஏந்தியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்