தமிழ்நாடு

பாஜக மா. தலைவர் வீட்டு நீச்சல் குளத்தில் இருந்த முதலை... சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி

தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம், டி.எஸ்.பாலையா கார்டனில் வசிப்பவர், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி மாவட்டத் தலைவர் பாலாஜி தங்கவேல். இவரது வீட்டில் உள்ள நீச்சல் குளத்தை சுத்தம் செய்வதற்காக, அதில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அப்போது, நீச்சல் குளத்தின் உள்ளே சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள முதலைக்குட்டி ஒன்று இருந்தது. பாலாஜி தங்கவேல், முதலைப் பண்ணையில் முதலை பராமரிப்பு பணி பயிற்சி மேற்கொண்டவர் என்பதால், முதலை குட்டியை பத்திரமாக பிடித்து ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் போட்டு வைத்து, வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் அங்கு வந்த பூங்கா ஊழியர்கள், முதலைக்குட்டியை மீட்டு கொண்டு சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்