தமிழ்நாடு

கதவை திறந்ததும் நிலைகுலைந்த பாஜக IT விங் முக்கிய புள்ளி.. உட்கட்சி பூசலால் பயங்கரம்..?

தந்தி டிவி

குடவாசல், காவனூர் பகுதியை சேர்ந்த மதுசூதனன் என்பவர், பாஜகவின் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராக பதவி வகித்து வரும் நிலையில், அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் கடையை திறக்க வந்த மதுசூதனனை 3 பைக்கில் வந்த ஆறு பேர், அரிவளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிருக்கு ஆபத்தான நிலையில், மதுசூதனனை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உட்கட்சி பூசலில், பாஜக நிர்வாகிகளே தாக்கியதாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, குடவாசல் பகுதியை சேர்ந்த பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் சங்க செயலாளர் ராஜசேகருக்கும், மதுசூதனனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது தெரியவர, இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’