தமிழ்நாடு

தடையை மீறி ஆர்ப்பாட்டம் - தஞ்சையில் பாஜகவினர் கைது

தந்தி டிவி

தஞ்சாவூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உட்பட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற தஞ்சாவூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி தொடக்க விழாவில், பாஜகவினரை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் ஒருமையில் பேசியதாக கூறி, பாஜகவினர் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி தராத நிலையில், தடையை மீறி போராடுவதற்கு தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு வந்த பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்