தமிழ்நாடு

அஜித்குமார் வழக்கில் CBI போட்ட FIR-ல் பகீர் ட்விஸ்ட்

தந்தி டிவி

நகை காணாமல் போனதாக நிகிதா புகார் - சிபிஐ வழக்கு பதிந்து விசாரணை

நகை காணாமல் போனதாக நிகிதா என்பவர் அளித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பத்திரகாளி அம்மன் கோவிலில் ஜூன் 27-ஆம் தேதி தரிசனத்திற்குச் சென்ற நிகிதாவின் காரிலிருந்த நகை காணாமல் போனதாக அவர் அளித்த புகாரின் பேரில் திருப்புவனம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் விசாரணை நடந்தபோது கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்ததால், அது கொலை வழக்காக மாற்றப்பட்டு ஐந்து தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்டனர். இதனை தற்போது சிபிஐ விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நகை காணாமல் போனதாக நிகிதா அளித்த புகார் குறித்தும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. நகையை எடுத்தவர்கள் அடையாளம் தெரியாவதவர்கள் எனக் குறிப்பிடப்பட்டு தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

ECI | TN Election | அனல்பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்வு - அதிரடியாக களத்தில் இறங்கிய போலீஸ்

Kerala | Fire Accident | திருச்சூர் பூரம் விழாவிற்காக வைக்கப்பட்ட பட்டாசுகள் வெடித்துபயங்கர விபத்து…

ECI | TN Elections | சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கம் - அறிவிப்பு வெளியீடு

Nellai | TN Election 2026 | தயாரான 1675 இயந்திரங்கள், குவியும் 2500 போலீஸ்.. தேர்தல் பணி தீவிரம்

TN Election | ECI | தமிழகத்தில் ஓய்ந்த பிரசாரம் - தலைகீழாக மாறிய ரூல்ஸ்