#Kumbakonam #Child #TNPolice #Harassment #ThanthiTV
Kumbakonam | குழந்தையின் உடலில் கடித்த காயங்கள்.. கொஞ்சுவது போல் தூக்கி இளைஞர் செய்த செயல்.. தடுக்காத குழந்தையின் தாய் கும்பகோணம் அருகே, மூன்று வயது பெண் குழந்தையிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைத் தடுக்கத் தவறியதாகக் குழந்தையின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார். நாச்சியார்கோவிலைச் சேர்ந்த 24 வயது பெண்ணின் கணவர் மலேசியாவில் வேலை செய்து வரும் நிலையில், யோகராஜ் என்பவர் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது குழந்தையைக் கொஞ்சுவது போல் தூக்கி, உடலின் பல இடங்களில் கடித்து காயப்படுத்தியதாகப் புகார் எழுந்தது. குழந்தையின் உடலில் காயத் தழும்புகளைக் கண்ட அப்பகுதி மக்கள், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து விசாரணை நடத்திய மகளிர் போலீசார், யோகராஜ் மற்றும் குழந்தையின் தாய் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.