ஒசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 50 ஏக்கர் நிலத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. பறவைகள் கூடு கட்டி வசிக்கும் விதமாகவும், முட்டைகள் இடும் விதமாகவும், இங்கு ஏராளமான மரங்கள் வளர்க்கப்பட்டு வனப்பகுதியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. நீர் பறவைகள், மீன்கொத்தி பறவைகள், பாம்பு தாரைகள், வண்ண நாரைகள் உள்ளிட்ட 135 வகையான உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகள் இங்கு காணப்படுகின்றன. மேலும் இங்கு மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரை சேமித்து 10 இடங்களில் நீர் தடாகங்கள் அமைக்கப்பட்டு அதில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.