தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை : அரசாணை வெளியீடு

நடப்பாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்படும் என கடந்த மே மாதம் 30ஆம் தேதி நடந்த பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 688 உயர்நிலைப்பள்ளி, 4 ஆயிரத்து 40 மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 7 ஆயிரத்து 728 பள்ளிகளில் பயோமெட்ரிக் பொருத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை நிறைவேற்ற 15 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவதை தவிர்க்க முடியும் என பள்ளிக்கல்வித்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏற்கனவே, பயோமெட்ரிக் வருகை பதிவு திட்டம், பெரம்பலூர் அரசு பள்ளிகளிலும், போரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சோதனை அடிப்படையில் நடைமுறையில் உள்ள குறிப்பிடத்தக்கது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்