ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரையிலான விவசாய நிலங்களை கையகப்படுத்துவது குறித்த, மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த கே.செல்லம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரை எரிவாயுக்குழாய் பதிக்க, விவசாய நிலங்களை கையகப்படுத்தும் மத்திய அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி அமர்வு, மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுத்துறை செயலர்,சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள், பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.