#vellore | #biketheft வெளிய போகும் போது பைக்கை பாத்து நிப்பாட்டுங்க... எவ்வளோ நைசா தூக்குறாங்க பாருங்க வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட் பகுதியில் வாகனத் தணிக்கையில் சிக்கிய இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரித்ததில், இவர்கள் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. நேதாஜி, சந்தோஷ் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.