தமிழ்நாடு

பைக் ரேஸ் இளைஞர்களால் பலியான பெண் எஸ்.ஐ. - சென்னையில் அதிர்ச்சி

பைக் ரேஸ் இளைஞர்களால் பலியான பெண் எஸ்.ஐ. - சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி

சென்னை வண்டலூர் அருகே பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர் விபத்தை ஏற்படுத்தியதில், ஸ்கூட்டரில் சென்ற ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை அடுத்த அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் செல்வகுமாரி. இவர் தோழியை பார்த்துவிட்டு, வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக ​ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மண்ணிவாக்கம் அருகே வரும்போது பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள், மூன்று மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வாகனத்தை இயக்கியுள்ளனர்.

இதில் ஒரு மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்ட செல்வகுமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞருக்கு கால் முறிவு ஏற்பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், பைக் ரேஸில் ஈடுபட்ட மற்ற இளைஞர்கள் தப்பியோடிவிட்டனர். விபத்தில் உயிரிழந்த செல்வகுமாரியின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பைக் ரேஸ் இளைஞர்களால் பலியான பெண் எஸ்.ஐ. - சென்னையில் அதிர்ச்சி

இதுதொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளிவட்ட சாலையில் பைக் ரேஸில் ஈடுபடும் நபர்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்