தமிழ்நாடு

தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனங்கள் - சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை

சென்னையில், வீட்டருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
சென்னை டி.பி சத்திரத்தை சேர்ந்த மார்ட்டின் என்பவர், வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தை நேற்றிரவு வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளார். மேலும் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் அரிகுமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோரும் தங்களது இருசக்கர வாகனத்தை அப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த நிலையில் அதிகாலை நேரத்தில் திடீரென வீட்டினுள் கரும்புகை சூழ்ந்ததால் உடனே வெளியே ஓடி வந்து பார்த்த போது நிறுத்தியிருந்த நான்கு, இருசக்கர வாகனங்கள் கொழுந்துவிட்டு எரிந்துள்ளன. பின்னர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீ அணைக்கப்பட்டுள்ளது. இதில் இரு புல்லட் உட்பட நான்கு இருசக்கர வாகனங்களும் எரிந்து சேதமடைந்தன. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், டிபி சத்திரம் போலீசார் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினர். அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ள போலீசார், இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் தீவைத்து எரித்துள்ளனரா அல்லது வேறு காரணமாக என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்