16 வயது சிறுவனுக்கு இருசக்கர வாகனம் கொடுத்த அண்ணன் கைது சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகர் பகுதியில், 16 வயது சிறுவன் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று, சாலையை கடக்க முயன்ற 72 வயது முதியவர் பாலனை மோதி விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, வண்ணாரப்பேட்டை போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில்,18 வயது நிறைவடையாத சிறுவனுக்கு இருசக்கர வாகனத்தை பயன்படுத்த கொடுத்ததாக அவரது அண்ணன் விக்னேஸ்வரனை கைது செய்த காவல்துறையினர், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்