தமிழ்நாடு

பிகில் பட விழா சர்ச்சை: தனியார் பொறியியல் கல்லூரிக்கு உயர்கல்வித்துறை நோட்டீஸ் : தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கண்டனம்

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் ஒலிநாடா விழா நடைபெற்ற தனியார் பொறியியல் கல்லூரிக்கு தமிழக உயர்கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பிகில் திரைப்படத்தின் ஒலிநாடா விழா நடைபெற்ற தனியார் பொறியியல் கல்லூரிக்கு தமிழக உயர்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கலைத்துறை சார்ந்த நிகழ்ச்சியை அடக்குவது ஜனநாயக விரோத நடவடிக்கை என கூறியுள்ளார். கல்லூரி வளாகத்துக்கு வெளியே அமைக்கப்பட்ட அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி குறித்து கல்வித்துறை விளக்கம் கேட்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜய் தனது உரையில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்பிட்டு பேசவில்லை என்றும், மாணவர் சங்க அழைப்பின் பேரில் கல்லூரிகளில் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், கலந்து கொள்வது வழக்கமான ஒன்றுதான் என்றும் கூறியுள்ளார். விழாவில் நடிகர் விஜய் கூறிய சில கருத்துக்கள் ஆளும் கட்சிக்கு எதிராக உள்ளதாக தவறாக புரிந்து கொண்டு உயர்கல்வித்துறையை தமிழக அரசு ஏவி விட்டுள்ளதற்கு கண்டனங்களை தெரிவிப்பதாகவும் அழகிரி கூறியுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை