தமிழ்நாடு

நான்கு உலோகங்களை கொண்டு செய்யப்பட 155 கிலோ 'தூண்டா' விளக்கு

கும்பகோணத்தில், நான்கு உலோகங்களை கொண்டு வித்தியாசமான தூண்டா விளக்கு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

ஐம்பொன் சிலைகள், விளக்குகள் தயாரிப்புக்கு புகழ் பெற்றது, கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை. இதன் அருகில் உள்ள திம்மக்குடியில் ஐந்தே முக்கால் அடி உயரத்திற்கு செம்பு, வெண்கலம், பித்தளை உள்ளிட்ட 4 உலோகங்களை கொண்டு கலைநுணுக்கத்துடன் கூடிய தூண்டா விளக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 155 கிலோ எடையுள்ள இந்த விளக்கில் தீபம் எரியும் பகுதி, எண்ணெய்யில் மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று மாத காலத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் உழைப்பில் இந்த தூண்டா விளக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மௌன சுவாமிகள் கோவிலுக்கு இந்த வித்தியாசமான விளக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்